சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பல இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும் மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது தொடர்ந்தும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இங்கு இன்று புதிதாக மேலும் 544 பேருக்கு வைரஸ் தொற்ளு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில் இதுவரை 35,836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்திவிடக் கூடாது என பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூh மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில நடவடிக்கைகள் தளர்த்தப்படுவது அனைவருக்கும் பெரும் நிம்மதியைத் தரும் என்ற போதிலும் சில ஆபத்துகளும் உள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘வைரஸ்தொற்றை எதிர்கொள்வது என்பது வேகமாக ஓடி முடிக்கும் குறுகிய தூர ஓட்டப் பந்தயமல்ல. அது நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தைப் போன்ற நீண்டகால போராட்டம்.
‘மனித வாழ்வியல் முறையில் உள்ள பலவீனங்களை கொரோனா வைரஸ்தொற்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. எனினும் இது நமது மீள்திறனைக் காட்டவும் பிரச்சினையிலிருந்து மீண்டு கூடுதல் வலிமையுடன் திகழவும் வாய்ப்பளித்துள்ளது,’ என பிரதமர் லீ தெரிவித்துள்ளார். #சிங்கப்பூர் #கட்டுப்பாடுகள் #கொரோனா