175
யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தின் கை மற்றும் கண்ணாடிக் கூடை உடைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர், மனநலம் குன்றியவர் என்று தெரிவித்து தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர். கோவிலின் மூலையில் அமைக்கப்பட்டிருந்த குறித்த சொரூபம் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று முற்பகல் வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் ஒருவர் என கூறப்படுவபவரால் கண்ணாடிகள் சிலையின் கைப்பகுதி என்பன அடித்து உடைக்கப்பட்டது.
அதனை அவதானித்த அப்பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , மனநலம் குன்றியவர் என தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதித்தனர்.தற்போது மாதாவின் சொரூபம் பாதுகாப்பு நலன் கருதி அடைக்கல மாதா ஆலயத்தின் உட்பகுதிக்குள் வைக்கப்பட்டுள்ளது. #மாதாசிலை #யாழ்ப்பாணம் #கைது #வெளிநாட்டவர்
Spread the love