Home இலங்கைதுவிச்சக்கர வண்டிகளைத் திருடர்கள் இருவர் கைது -10 துவிச்சக்கர வண்டிகள் மீட்பு

துவிச்சக்கர வண்டிகளைத் திருடர்கள் இருவர் கைது -10 துவிச்சக்கர வண்டிகள் மீட்பு

by admin

யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டன என்று  காவல்துறையினர்  தெரிவித்தனர்.

“நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நகர வீதியில் துவிச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்குக் கொண்டு மற்றொரு துவிச்சக்கர வண்டியை இழுத்துச் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகம் கொண்ட யாழ்ப்பாணம் தலைமையக காவல்நிலைய குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த சிவில் காவல்துறையினர், அவரை விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன்போது சந்தேக நபர், கொட்டடிப் பகுதியில் உள்ள இடமொன்றை அடையாளம் காட்டியுள்ளார். அங்கு மேலும் 9 துவிச்சக்கர வண்டிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. அத்துடன், மேலும் ஒருவர்   கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர்கள் இருவரும் அரியாலை, சுண்டுக்குளி, குருநகர் உள்பட யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் காவல்நிலையத்துக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் துவிச்சக்கர வண்டிகளை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவார்கள்”என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.  #துவிச்சக்கரவண்டிகள் #திருடர்கள் #யாழ்ப்பாணம்  #அரியாலை #சுண்டுக்குளி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More