Home இலங்கைகசிப்பு மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பூசகர் கைது

கசிப்பு மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பூசகர் கைது

by admin

வீட்டுக்குள் சட்டத்துக்குப் புறம்பான கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று தெல்லிப்பழை காவல்துறையினர்  தெரிவித்தனர். ஏழாலையைச் சேர்ந்த பூசகர் ஒருவரே 27 லீற்றர் கசிப்பை வீட்டின் குளியலறையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டார் என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

“காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த காவல்துறை அத்தியட்சகர் சேனாதீரவின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காவல்துறைபிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் அடுத்தவாரம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என்றும் தெல்லிப்பழை காவல்துறையினர் குறிப்பிட்டனர்.  #கசிப்பு  #பூசகர் #கைது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More