Home இலங்கைஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது

by admin

ஹெரோயினை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 5 பேர் அச்சுவேலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். “அச்சுவேலி பத்தைமேனி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 2 கிராம் 450 மில்லிக்கிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று  காவல்துறையினர்  தெரிவித்தனர். சந்தேக நபர்கள் ஐவரும் 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள்” என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். #ஹெரோயின்   #கைது  #அச்சுவேலி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More