சுகாதார வழிமுறைகளுக்கமைய மத வழிபாடுகள் மற்றும் தனியார் வகுப்புகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் யூன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் மத வழிப்பாட்டு தலங்களில் வழிபாடுகளில் ஈடுபடலாம் எனவும் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 50 பேருக்கு மாத்திரமே வழிபாடுகளில் ஈடுபட முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக 100 மாணவர்களை மாத்திரம் உள்வாங்கி யூன் 15ம் திகதி முதல்தனியார் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை மிருகக்காட்சி சாலைகள் மற்றும் தேசிய பூங்காக்கள் எதிர்வரும் யூன் 15ஆம் திகதி முதல் மீள திறக்கப்படும் என அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #மதவழிபாடுகள் , தனியார்வகுப்பு #மீளஆரம்பிப்பதற்கு #மிருகக்காட்சிசாலை