179
அரசியல் தலைமை என்பது மக்களை வழி நடத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, நடைமுறைச் சாத்தியமற்ற மக்களின் விருப்பங்களின் பின்னால் இழுபட்டு செல்வதாக இருக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் இடம் பெற்ற மக்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட பின் கருத்து தெரிவித்த போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
கடந்த காலத்தில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்யவில்லை. இதனாலே தமிழ் மக்களுடைய பிரச்சினை தீரா பிரச்சினையாக உள்ளது. வர இருக்கும் சந்தர்பத்தில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்தால் மக்கள் எதிர் கொள்ளும் சகல பிரச்சினைகளையும் குறிப்பாக அரசியல் உரிமை பிரச்சினைகள், அபிவிருத்தி , அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வை நாம் கண்டு கொள்ள முடியும்.
கடந்த காலங்களில் மன்னார் மாவட்டம் உற்பட பல மாவட்டங்களில் நாங்கள் சேவை செய்துள்ளோம். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திருக்கின்றோம். ஆனாலும் நாடாளு மன்றத்தில் என் கட்சி சார்பாக நான் ஒருவனே இருக்கின்றேன். அமைச்சராக இருந்தாலும் என் அதிகாரத்துக்கு உட்பட்டே என்னால் செயல் பட முடியும்.
இதன் காரணமாகவே திடமான அரசியல் கொள்கை, அதனை அடைவதற்கு தேவையான வழி முறை பற்றிய தெளிவு, மனவுறுதி போன்றவை இருந்த போதிலும் மக்கள் ஆதரவு போதியளவு இதுவரை கிடைக்கவில்லை.
இதன் காரணமாகவே இலக்கினை இதுவரை அடைய முடியாமல் இருக்கின்றோம்.தனித்துவமாக எமது பகுதியில் நாங்கள் இத்தேர்தலில் போட்டியிட்டாலும் ஆட்சியில் வர கூடியவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்து எங்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்பதே எங்கள் நோக்கம் என அமைச்சர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார். #மக்கள்ஆதரவு #இலக்கினை #அரசியல்தலைமை #டக்ளஸ் தேவானந்தா#மன்னார்
Spread the love