Home இலங்கையாழ்ப்பாணம் – கலட்டியில் நையப்புடைக்கப்பட்ட இளைஞர்கள் நால்வர் வைத்தியசாலையில்…

யாழ்ப்பாணம் – கலட்டியில் நையப்புடைக்கப்பட்ட இளைஞர்கள் நால்வர் வைத்தியசாலையில்…

by admin

யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் வீதியால் செல்லும் பெண்களை அசௌகரியப்படுத்தி  வந்த இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கலட்டி வீதியால் செல்லும் பெண்களை தொடர்ச்சியாக அசௌகரியப்படுத்தி  வந்த இளைஞர்களின் தொல்லை தாங்காமல், குறித்த பெண்கள் தமது உறவினர்களிடம் விடயத்தை தெரிவித்ததையடுத்து  பெண்களின் உறவுக்காரர்களால் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் நையப்புடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காயமடைந்த நால்வரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் காவற்துறையினர்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More