வெளிநாடுகளில் இருந்து செல்லும் அனைவருக்கும் PCR பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது, PCR பரிசோதனை முடிவுகளை விமான நிலையத்தில் உடனடியாக பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (16) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கருத்து வெளியிட்ட அவர் “நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைவருக்கும் PCR பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
எதிர்காலத்தில், PCR பரிசோதனை அறிக்கைகளை விமான நிலையத்தில் உடனடியாக பெற்று, தொற்றுக்கு உள்ளானவர்களை வைத்தியசாலைக்கும் ஏனையவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.