Home இலங்கைமினி பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து -ஒருவர் பலி

மினி பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து -ஒருவர் பலி

by admin

மினி பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர். பலாலி வீதி – பருத்தித்துறை வீதி இணையும் சிராம்பியடிச் சந்தியில் இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

வடக்கம்பரை – பண்ணாகத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம் மற்றும் விவசாய பீடத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்றிச் செல்லும் மினி பஸ்ஸே விபத்துக்குள்ளாகியது.

சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்  நிலைய போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். #மினிபஸ் #மோட்டார்சைக்கிள்  #விபத்து   #யாழ்ப்பாணம்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More