332
கொரோனா தொற்று காரணமாக இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு அனுமதியளிப்பதில்லை என சௌதி அரேபிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சௌதி அரேபியாவினுள் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தினால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் சௌதி அரேபியா நாட்டவர்கள் மற்றும் தற்போது அங்கு தங்கியுள்ளவர்களுக்கும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வருடாந்தம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love