கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகவீனம் காரணமாக தன்னால் முன்னிலையாக முடியவில்லை எனவும் குணமடைந்ததும் வாக்குமூலம் வழங்குவதாகவும் தனது சட்டத்தரணி ஊடாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருணா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை:
Jun 23, 2020 at 08:06
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அவர் வெளியிட்ட கருத்து குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர், தெரிவித்திருந்ததனையடுத்து உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு நேற்றையதினம் பதில் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்தநிலையிலேயே வாக்குமூலம் வழங்குவதற்காக கருணா இன்றையதினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனையிறவில் 24 மணிநேரத்துக்குள் 2 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் எனவும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கும் போது இராணுவத்தினரில் குறிப்பிட்ட எண்ணிக்கையினரை தான் கொலை செய்திருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது #கருணா #குற்றப்புலனாய்வுத்திணைக்களம் #விடுதலைப்புலிகள்