வெளிநாட்டு ஊழியர்களுக்கு க்ரீன் கார்ட் மற்றும் எச்-1பி விசா எச்-2பி விசா உள்ளிட்ட விசா வழங்குவதற்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் நீடித்துள்ளார் இதன் காரணமாக தொழில்நுட்ப பணியாளர்கள், விவசாயம் சாராத பணியாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இக்கட்டான உலகத் தொற்று சூழலில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையானது அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்கா எடுத்துள்ள இந்த நடவடிக்கையானது 5,25,000 மக்கள் மீது தாக்கம் செலுத்தும்.
கடந்த ஏப்ரல் மாதமே வெள்ளை மாளிகை அறிவித்திருந்த இந்த தடையானது திங்கட்கிழமையுடன் முடிவடையும் சூழலில், தற்போது இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்கள் இந்த நடவடிக்கையால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகமாட்டார்கள்.
அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றை காரணமாக வைத்து குடிவரவு சட்டங்களை அமெரிக்கா கடுமையாக்குவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #க்ரீன்கார்ட் #எச்1பி #விசா #அமெரிக்கா #வெள்ளைமாளிகை