பிரேசில் ஜனாதிபதி ஜேர் போல்சனாரோ பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அந்த உத்தரவை அவர் மீறினால் நாள்தோறும் 390 டொலர் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அந்நாட்டு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஜேர் போல்சோனாரோ , உலகமே கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தில் இருக்கும் போது, மக்கள் சமூக விலகல், முக்கவசம் அணியத் தேவையில்லை எனவும் சுதந்திரமாக நடமாடுங்கள் எனவும் பிரச்சாரம் செய்திருந்தார்.
மக்கள் முடக்கம் காரணமாக வீட்டுக்குள் முடங்கி இருந்தால், கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பு பொருளாதார முடக்கத்தால் ஏற்படும். எனவே மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக பொருளாதார நடவடிக்ைகயில் ஈடுபடுங்கள் என தொடர்ந்து தெரிவித்து வரும் அவர் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிவதில்லை.
உலகளவில் கொரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள பிரேசிலில் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 11 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மக்களிடையே சென்று பேசும்போதும், கூட்டங்களில் பங்கேற்கும்போது ஜனாதிபதி போல்சோனாரோ முக்கவசம் அணியாமல் இருப்பதால், அவரைக் மாவட்ட நீதிபதி கடுமையாக் எச்சரித்துள்ளார்.
அவர் எங்கு சென்றாலும் அவர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவ்வாறு நீதிமன்ற உத்தரவை அவர் மதிக்காவிட்டால் அவர் நாள்தோறும் 390 டொலர் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோ மட்டுமன்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ ஜனாதிபதி அன்ட்ரஸ் மேனுல் லோபஸ் ஓப்ரடார், அர்ஜென்டினா ஜனாதிபதி அல்பர்ட் பெர்னான்டஸ் ஆகியோரும் வெளியே செல்லும் போது முக்கவசம் அணியாமல் ஆதரவாளர்களிடம் பேசுவதுடன் செல்பியும் எடுத்துக் கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது #பொதுஇடங்கள் #முகக்கவசம் #அபராதம் #பிரேசில் #கொரோனா