Home இலங்கைஇலங்கை வானொலித்துறையின், சிம்மக் குரல் ஒன்று அடங்கிப் போனது…

இலங்கை வானொலித்துறையின், சிம்மக் குரல் ஒன்று அடங்கிப் போனது…

by admin

இலங்கையின் சிரேஷ்ட ஒலி,ஒளிபரப்பாளரும், இலங்கை வானொலியின் சிரேஸ்ட்ட அறிவிப்பாளர்களில் ஒருவரும்,  சூரியன் FM வாணொலியின் முதலாவது நிகழ்ச்சி முகாமையாளரும், முன்னாள் ஆலோசகருமான    சின்னையா நடராஜசிவம் காலமானர்.

நேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தனது 74 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார். நீண்டகாலமாக இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அவர் பணியாற்றி இருந்ததோடு, பிற்காலத்தில் தனியார் வானொலித்துறையில் உச்சத்தை தொட்டிருந்தார்.

இவர் திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட, மேடை நடிகராவார். ´ஒதெல்லோ´, ´நத்தையும் ஆமையும்´ முதலான பல வானொலி நாடகங்களில் நடித்ததோடு, ஒலிச்சித்திரங்களிலும் பங்குபற்றியிருக்கிறார்.

ரூபவாகினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப்பெற்ற, கலாநிதி ஜே. ஜெயமோகன் எழுதிய ´கற்பனைகள் கலைவதில்லை´ என்ற நாடகத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More