Home இலங்கைசந்தேக நபரின் மல வாசலிலிருந்து 4 பக்கட் ஹெரோயின் மீட்பு

சந்தேக நபரின் மல வாசலிலிருந்து 4 பக்கட் ஹெரோயின் மீட்பு

by admin

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் மலவாசலில் இருந்து 4 பக்கெட்டுக்கள் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றது என்று யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 50 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டார்.சந்தேக நபரை வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் சந்தேக நபர் யாழ்ப்பாணம் மறியல்சாலையில் நேற்றிரவு சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 300 மில்லிக்கிராம் (பக்கட்டுகளுடன்) ஹெரோயின் பக்கட்டுக்கள் நான்கு அவரது மல வாசலில் இருந்து மீட்கப்பட்டது. சம்பவத்தையடுத்து சந்தேக நபர் மயக்கமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். #யாழ்ப்பாணம்  #சிறைச்சாலை #ஹெரோயின்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More