மியன்மாரில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மியன்மாரின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் உள்ள மரகதக்கல் சுரங்கத்தில் இன்று காலை திடீரென இவ்வாறு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கனமழை காரணமாக நிலப்பகுதி ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதனால் மண் குவியல் குவியலாக தொழிலாளர்கள் மீது விழுந்து அமுக்கியதில் பல தொழிலாளர்கள் அதில் சிக்கிக்கொண்டனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சுமார் 50 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. #மியன்மார் #நிலச்சரிவு #தொழிலாளர்கள் #மரகதக்கல்சுரங்கம்