Home உலகம்பாதுகாப்பான நாடுகள் பயணப்பட்டியலிலிருந்து அமெரிக்கா நீக்கம்

பாதுகாப்பான நாடுகள் பயணப்பட்டியலிலிருந்து அமெரிக்கா நீக்கம்

by admin

கொரோனா பாதிப்பு காரணமாகப் பாதுகாப்பான நாடுகள் பயணப்பட்டியலில் இருந்து அமெரிக்காவை, ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது. நேற்று யூலை முதலாம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தின வெளிப்புற எல்லைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 27 உறுப்பினர்களைக்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய ஆணையகம், அதன் எல்லைகளுக்கு அப்பால் 14 நாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் வணிகப் பயணங்கள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளது.

அல்ஜீரியா, அவுஸ்திரேலியா, கனடா, ஜோர்ஜியா, ஜப்பான், மாண்டினீக்ரோ, மொராக்கோ, நியூசிலாந்து, ருவாண்டா, செர்பியா, தென்கொரியா, தாய்லாந்து, துனிசியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

குறிப்பாக தெற்கு ஐரோப்பாவின் நாடுகள் கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றிய பயணத் தொழில் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட அமெரிக்கா, ரஸ்யா, பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட நாடுகள் அனுமதி ஒப்புதலுக்காகக் குறைந்தது இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. #பாதுகாப்பானநாடுகள்  #பயணப்பட்டியல்  #அமெரிக்கா #நீக்கம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More