Home உலகம்இத்தாலியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்

இத்தாலியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்

by admin

இத்தாலியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று  விபத்துக்குள்ளானதில்  16 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 39 பேர் காயமடைந்துள்ளனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை  ஹங்கேரியில் இருந்து  பாடசாலை மாணவர்களை ஏற்றி  கொண்டு   சென்ற பேருந்து   சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி  வீதியோரத்தில் இருந்த தூணுடன் மோதியதனால் பேருந்து தீப்பற்றி  இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விடுமுறையை கழிக்க சென்றுவிட்டு, பிரான்ஸிலிருந்து  திரும்பி வந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  கோபுர தூணில் இந்த வாகனம் மோதியவுடன், பெரும்பாலும் 14 முதல் 18 வயது வரையான பாடசாலை  மாணவர்கள் தூக்கி எறியப்பட்டதாகவும் எதனால் இந்தவிபத்து ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்படுவதாகவும்  இத்தாலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More