Home இலங்கைசிவாஜிலிங்கத்தை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு

சிவாஜிலிங்கத்தை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு

by admin
நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கக் கோரி மானிப்பாய் காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் நாளை முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்புக் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளைமறுதினம் வியாழக்கிழமை நினைவுகூரப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே நினைவேந்தல் நிகழ்வை ஆர்ப்பாட்டமாகச் சித்தரித்து இந்தத் தடை உத்தரவை மானிப்பாய் காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றில் கோரியுள்ளனர். #நவாலி  #சென்பீற்றர்ஸ்தேவாலய  #படுகொலை #நினைவேந்தல்  #சிவாஜிலிங்கம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More