ராஜங்கனை 01, 03 மற்றும் 05ஆம் பிரதேசங்களில் மக்கள் நடமாடுவது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றாளர்கள் சிலர் இனங்காணப்பட்டதனையடுத்தே இவ்வாறு மக்கள் நடமாடுவது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ராஜாங்கனை பகுதியில் இடம்பெற்ற மரண வீட்டின் மத நிகழ்வுகளின் போது உரிய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றாமையே இந்நிலமைக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2631ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தகாடு மத்திய நிலையத்தில் மேலும் 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளதனையடுத்தே இவ்வ அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. #ராஜங்கனை #மக்கள்நடமாட்டம் #தடை #கொரோனா #கந்தகாடு