Home இலங்கைநல்லூர் திருவிழாவில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்குமாறு பிரதமர் பணிப்பு

நல்லூர் திருவிழாவில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்குமாறு பிரதமர் பணிப்பு

by admin


யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பணித்துள்ளார். இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா வடக்கிற்கு சென்றுள்ள நிலையிர் அவரிடம் பிரதமர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் அதிகளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவினை ஆலய ஊழியர்கள், இந்துக் குருமாருடன் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திருவிழாவில் குறைந்தளவிலாவது பக்தர்களை ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என, பிரதமரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து அது தொடர்பில் பரிசீலனை செய்த பிரதமர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அதிகளவில் பக்கதர்கள் பங்கேற்ற வழிசெய்யுமாறு பணித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  #நல்லூர்  #திருவிழா #பக்தர்கள் #பிரதமர் #சவேந்திரசில்வா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More