Home இந்தியாஅசாம் மாநிலத்தில் ராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் மோதல்

அசாம் மாநிலத்தில் ராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் மோதல்

by admin

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இன்றைய தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வாகனம் மீது  போராளிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டதனைத் தொடர்ந்து  இருதரப்பினருக்கும் இடையில் கடுமையான  மோதல்கள் இடம்பெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் போடோ மற்றும் உல்பா உள்ளிட்ட போராளி குழுக்களின் ஆதிக்கம் நிறைந்த அசாம் மற்றும் அருணாசலப்பிரதேசம் மாநில எல்லைப்பகுதியான துன்சுக்யா மாவட்டத்தில் நெடுஞ்சாலை வழியாக இன்று காலை வாகனங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் மறைந்திருந்த போராளிகள் ரோந்து வாகனங்களின்மீது கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் திடீர் தாக்குதல் நடத்தினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அந்தப்பகுதிகளில் மோதல்கள் இடம்பெற்றுவருவதாகவும்  இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More