Home உலகம்ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி இரண்டுகட்ட சோதனைகளிலும் வெற்றி :

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி இரண்டுகட்ட சோதனைகளிலும் வெற்றி :

by admin

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர உலகம் முழுவதும் சுமார் 100-க்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும் அவை அனைத்தும் தற்போது வரை சோதனையிலேயே இருந்து வருகிறது. பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அது வெற்றி பெற்றதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக 1077 நபர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது சோதனையில் உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திடம் பிரித்தானியா  கேள்வி மனு  கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #ஒக்ஸ்போர்ட் #கொரோனா #தடுப்பூசி #வெற்றி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More