Home இந்தியாவேலூர் சிறையில் நளினி தற்கொலை முயற்சி

வேலூர் சிறையில் நளினி தற்கொலை முயற்சி

by admin

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு  சிறையில் உள்ள நளின் வேலூர் சிறைச்சாலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்  உள்ளனா்.  இவர்களது விடுதலை தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்து 2 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுகுறித்து ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். நளினி உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவு சென்றதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தை சிறை அதிகாரிகள் மறைக்க முயற்சிப்பதாகவும், அவர்கள் கூறிய காரணம் நம்பும் அளவுக்கு இல்லை என்வும் அவர் குற்றம் சுமத்தியுள்ளாா்.

நளினி மற்றொரு கைதியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாகவும்   இதுதொடர்பாக  சிறைக்காவலாிடம்  முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதன்  பின்னர், விசாரணை நடைபெற்றதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சண்டையால் வருத்தமடைந்த நளினி தற்கொலைக்கு முயன்றதாக அதிகாரிகள் கூறினர் எனவும்  புகழேந்தி தொிவித்துள்ளாா் . மேலும் கைதிகளுக்கு இடையிலான இத்தகைய சண்டைகள் மிகவும் பொதுவானவை. இது நளினி முடிவின் பின்னணியில் இருக்கக்கூடும் என்று நம்புவது கடினம். இதன் பின்னணியில் இன்னும் தெளிவும் விசாரணையும்  தேவை  எனவும்  அவா் தொிவித்துள்ளாா்.

 

முன்னதாக தன்னை சட்டவிரோத காவலில் அடைத்து வைத்திருப்பதாகவும், விடுதலை செய்ய வேண்டுமெனவும் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. #ராஜீவ்காந்தி   #கொலை #நளினி #தற்கொலை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More