Home இலங்கைஉயிர் அச்சுறுத்தல் – சிறைச்சாலை ஆணையாளர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது…

உயிர் அச்சுறுத்தல் – சிறைச்சாலை ஆணையாளர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது…

by admin

உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பூஸா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குற்றச் செயல்களில் ஈடுபடும் குழு ஒன்றினால் இவ்வாறு மூன்று சிறைச்சாலை ஆணையாளர்களுக்கு இவ்வாறு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலை முகாமை மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க, சிறைச்சாலை புலனாய்வு பிரிவின் ஆணையாளர் துசித உடுநுவர மற்றும் புலனாய்வு பிரிவின் உதவி ஆணையாளர் பிரசாத் பிரேமதிலக ஆகியவர்களுக்கு இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி பூஸா சிறைச்சாலையில் கைதிகள் குழு ஒன்று உண்ணாவிரத்தத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினரான கொஸ்கொட தாரக மற்றும் ஹிக்கடுவே பொடி லெசி ஆகியோரினால் இவ்வாறு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More