அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில், தெற்கு நகரமான சிக்னிக்கில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடா்ந்து அமெரிக்க தேசிய -சுனாமி எச்சரிக்கை மையம் அலாஸ்கா கடற்கரையின் தெற்குப்பகுதி, அலெயுடியன் தீவுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளநிலையில் சில இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. #அலாஸ்கா #சுனாமி #எச்சரிக்கை #நிலநடுக்கம்