Home இலங்கைஒரு வழக்கிலிருந்து விமல் வீரவன்ச விடுதலை

ஒரு வழக்கிலிருந்து விமல் வீரவன்ச விடுதலை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஒரு வழக்கிலிருந்து விமல் வீரவன்ச விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரியான வசந்த பெரேராவினால் தொடரப்பட்டிருந்த வழக்கில் விடுதலை செய்யபட்டுள்ளார்.

விமல் வீரவன்ச மீது கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மிக நீண்ட காலமாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இறுதியில் விமல் வீரவன்ச குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக இராணுவ அதிகாரி மீளவும் மேன்முறையீடு செய்திருந்தார். இந்த மேன்முறையீட்டு வழக்கிலும் விமல் வீரவன்ச குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More