160
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று புதன் கிழமை(5) காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகி உள்ளது. -காலை 7 மணிமுதல் 12 மணி வரையுமான நேரப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் 49.53 வீதமான வாக்குகள் பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலையில் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் இடம் பெற்று வருகின்றது. -காலையில் வாக்களிப்புக்கள் மந்த கதியில் இடம் பெற்ற போதும் தற்போது மக்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்கள் வாக்களித்து வருகின்மையினை அவதானிக்கக்கூடியாதாக உள்ளது. மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேசச் செயலாளர்கள் பிரிவுகளிலும் அமைக்கப்பட்ட 76 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது. #மன்னார் #வாக்குப்பதிவு, #தேர்தல். #வாக்களிப்புநிலையங்கள்
.
Spread the love