Home இலங்கையாழ்ப்பாண வீட்டிற்கு, ஸ்ரீதரன் – சுமந்திரன் – சித்தார்த்தன் தெரிவாகினர்…

யாழ்ப்பாண வீட்டிற்கு, ஸ்ரீதரன் – சுமந்திரன் – சித்தார்த்தன் தெரிவாகினர்…

by admin

2020 இலங்கையின்  நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில்,  யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.மகேசன்,  தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில்  தெரிவானவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதன்படி,

இலங்கை தமிழரசுக் கட்சியில், சிவஞானம் ஸ்ரீதரன் அதிகூடிய விருப்பு வாக்குகளாக 35,784 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

 எம்.ஏ.சுமந்திரனுக்கு 27,834 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும்,

தர்மலிங்கம் சித்தார்த்தன் 23,740 விருப்பு வாக்குகளையும்,

சசிகலா 23,098 விருப்பு வாக்குகளையும்,

ஈ.சரவணபவன் 20,392 வாக்குகளையும்,

ஆர்னோல்ட் 15,378 வாக்குளையும்,  பெற்றுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More