லெபனானில் இடம்பெற்றவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாித்துள்ளதாக தொிவித்துள்ள இலங்கை தூதரகம் காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொிவித்துள்ளது
லெபனானில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 5000 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த வெடிப்புச் சம்பவத்தில். அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் மற்றும் அதிகாரிகளின் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டு இருந்த போதிலும் இலங்கை தூதரகம் நாளாந்தம் திறந்திருக்கும் என லெபனானிற்கான இலங்கை தூதுவர் ஷானி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் லெபனான் அரசாங்கத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #லெபனான் #வெடிப்பு #இலங்கையர் #தூதரகம்