Home இலங்கைஐ.தே.கவின் தலைமைப்பதவியை துறப்பதில் மீண்டும் குழப்பம்

ஐ.தே.கவின் தலைமைப்பதவியை துறப்பதில் மீண்டும் குழப்பம்

by admin

மாகாணசபை தேர்தல் நடைபெறும்வரை ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், கட்சியை மறுசீரமைக்க வேண்டும் எனவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையின் கீழ்,  கட்சியினை மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு 03 – 05ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலின்போது இவை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் பெறுபேறுகளை ஆராய்ந்து உடனடியாக கட்சியை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது #ரணில்விக்கிரமசிங்க #மாகாணசபை தேர்தல் #ஐக்கியதேசியக்கட்சி

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் தொடர்பில் நாளை (14) நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More