கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக 200 க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த கல்விஅமைச்சு தீர்மானித்துள்ளது.
வைரஸ் பரவலின் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளாா். .
நாடளாவிய ரீதியில் கடந்த 10 ஆம் திகதி பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமான நிலையில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய தினம் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் சுகாதார வழங்கிய வழிகாட்டல்களின் கீழ் பாடசாலைகளை வழமைப் போல் நடாத்த முடியுமானால் வழமைப்போல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைத்துக் கொள்ளவதில் தடையில்லை என கல்வி அமைச்சு பாடசாலை பிரதானிகளுக்கு அறிவித்துள்ளது. #கல்விஅமைச்சு #கொவிட்19 #பாடசாலைகள் #கட்டுப்பாடுகள்