Home இலங்கைSLFPஐ தேடுகிறேன் – MY3 அழித்துவிட்டார் – புதியதலமை தேவை – MR சக்தி மிக்கவர் – அவரை ஏற்கமுடியாது….

SLFPஐ தேடுகிறேன் – MY3 அழித்துவிட்டார் – புதியதலமை தேவை – MR சக்தி மிக்கவர் – அவரை ஏற்கமுடியாது….

by admin

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எங்கே என நான் தேடி வருகிறேன். கடந்த ஆண்டு சிறிசேன கட்சியை அழித்துவிட்டார். ராஜபக்ஸவின் அரசியலை நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இருப்பினும் அவர் சக்திமிக்க தலைவராவார்.”


“ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை எண்ணி வருத்தம் அடைகின்றேன். அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. சிறிசேன மோசமான முறையில் கட்சியை அழித்துவிட்டார். இப்போது கேவலமான முறையில் சில அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. எமது கட்சியின் தலைவருக்கு எதுவும் இல்லை. செயலாளருக்கு பற்றிக் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. அதன்கீழ் நிறுவனங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More