ஜம்மு-காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தில் உள்ள சுமார் பத்தாயிரம் துணை ராணுவப் படையினரை உடனடியாக விலக்கிக் கொள்ள இந்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது .
2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370இன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு ஒன்றிய பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் அங்கு படைகள் விலக்கப்படுவதில் இதுவே பெரிய எண்ணிக்கையாகும்.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 7,000 துணை ராணுவப் படையினர் அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட போதும் 20202 ஜூலை 2020யில் மீண்டும் 10,000 பேர் அங்கு காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது கறிப்பிடத்தக்கது #ஜம்முகாஷ்மீர் #துணைராணுவப்படை #உள்துறைஅமைச்சு