Home உலகம்வட கொரியா ஜனாதிபதி ஆட்சி அதிகாரத்தை தங்கையிடம் ஒப்படைக்க முடிவு?

வட கொரியா ஜனாதிபதி ஆட்சி அதிகாரத்தை தங்கையிடம் ஒப்படைக்க முடிவு?

by admin

வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங்க் உன் ஆட்சி அதிகாரத்தை தனது தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


38 வயதான கிம் ஜாங்க் உன்னின் உடல் நிலை குறித்தும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் பல்வேறு ஊகங்களில் செய்திகள் வெளியான நிலையில் கடந்த மே மாதம் உர தொழிற்சாலை திறப்பு விழாவில் அவா் தனது சகோதரியுடன் கலந்து கொண்டார்.


இந்நிலையில் ஆட்சியில் தனது சகோதரி கிம் யோ ஜாங்க் முக்கிய பொறுப்பு வகிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான புதிய கொள்கையை அறிவித்து தனக்குள் இருக்கும் அனைத்து அதிகாரத்தையும் கிம் யோ ஜாங்கிற்கு பகிர முடிவு செய்துள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னா் உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள போது அவர் இல்லாத நிலையில், அவருடைய சகோதரி, கிம் யோ ஜாங்க் ஆட்சியை நிர்வகித்து வந்தாக கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #வடகொரியா #ஆட்சிஅதிகாரம் #தங்கை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More