சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் வடக்கு கிழக்கில் எதிர் வரும் 30 ஆம் திகதி நினைவு கூறப்பட உள்ளதோடு, அன்றைய தினம் வடக்கு கிழக்கில் இடம் பெறவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பை வழங்கும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
எதிர் வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை வடக்கு-கிழக்கில் 8 மாவட்டங்களை உள்ளடக்கி மாபெரும் கண்டன பேரணி ஒன்றை மேற்கொள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.குறித்த போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பை வழங்கும்.
ஒவ்வொரு வருடமும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு கிழக்கில் தமது உறவுகளை நினைவு கூறுகின்றனர்.காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆனால் இது வரை அவர்களின் போராட்டத்திற்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
தீர்வு கிடைக்கும் என்று நம்பி உறவுகள் போராட்டங்களை வருடா வருடம் முன்னெடுக்கின்றனர். ஆனால் இது வரை உரிய பலன் கிடைக்கவில்லை.
எனவே நீதிக்காகவும், தமது உறவுகளுக்காகவும் எதிர் வரும் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பை வழங்கும்.
-எனவே பொது அமைப்புக்களும்,தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார். #காணாமல்ஆக்கப்பட்டோர் #போராட்டத்திற்கு #தமிழ்தேசியக்கூட்டமைப்பு #ஆதரவு.