முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பில் அமைந்துள்ள வீட்டுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் காவல்துறைப் பிரிவு அதிகாாிகள் சென்றுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் இன்று காலை அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியை இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னா் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் , தனக்கு குறித்த காவல்துறைப் பிரிவில் முன்னிலையாக முடியாது எனவும் கொழும்பில் அமைந்துள்ள தனது இல்லத்திற்கு வந்து வாக்குமூலத்தினை பதிவு செய்து கொள்ளுமாறும் முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்த நிலையில் ஆணைக்குழுவின் காவல்துறைப் பிரிவு அதிகாாிகள் இன்று காலை அவரின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். #மைத்திரிபால #உயிர்த்தஞாயிறு #தாக்குதல் #வாக்குமூலம்