அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் கறுப்பினத்தை சேர்ந்த ஜேக்கப் பிளேக் என்பவா் காவல்துறை அதிகாரி ஒருவரால் ஏழு முறை சுடப்பட்ட சம்பவம் அந்த நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஜேக்கப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் அவரது நிலைமை தற்போது சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
.
ஜேக்கப் பிளேக் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரியின் பெயர் ரஸ்டன் ஷெஸ்கி என்றும், அவர் கடந்த ஏழாண்டுகளாக கென்னோஷா நகர காவல்துறையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கறுப்பின இளைஞர் மீது நடத்தப்பட்டுள்ள இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விஸ்கான்ஸின் மாகாணம் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தப் போராடங்கள் வன்முறையாக மாறியதில் இருவா் உயிாிழந்துள்ளதாகவும் காவல்துறை வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவை சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
அமொிகாகவின் மின்னசோட்டா தலைநகர் மினியாபொலிஸில், 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல்துறையினர் பிடியில் கழுத்து நொிபட்டு உயிாிழந்த சம்பவத்திற்கு நீதிகோரி நடத்தப்பட்ட போராட்டங்கள் தணிவதற்குள் இத்தகைய சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனா்.
இதேவேளை, உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான ஜப்பானின் நவோமி ஒசாகா, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவில் நடைபெற்று வரும் வெஸ்டர்ன் & சதர்ன் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #அமெரிக்கா #கறுப்பினத்தவா் #தாக்குதல் #போராட்டம் #வன்முறை #நவோமி