குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி குறித்து பாராளுமன்றில் விவாதம் ஆரம்பமாகியுள்ளது. ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந்த மோசடி குறித்து ஜனாதிபதி விசாரணைக் குழு அமைக்கும் ஜனாதிபதியின் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி குற்றச்சாட்டு குறித்து வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் விசாரணை அறிக்கை மூன்று மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மோசடிக் குற்றச்சாட்டு குறித்து எதனையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் அதன் காரணமாகவே பாராளுமன்ற விவாதம் நடத்தப்படுவதாகவும் அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு காரணமாக மத்திய வங்கியின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.