குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவிற்கு பயணம் செய்த போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் இயங்கி வரும் இலங்கைப் பாடசாலைகள் கல்வி அமைச்சுடன் இணைக்கப்பட வேண்டுமென கோரியுள்ள அவர் சவூதி அரேபியாவில் இலங்கையர்கள் நல்ல விதமாக நடத்தப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள், இலங்கைப் பிரஜைகள் எனவும் அவர்களின் சிவில் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ள வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் சொந்த நாட்டில் தொழில்களை தொடங்குவதற்கு அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.