முல்லைத்தீவு உதயார்கட்டு பகுதி மற்றும் மகாவலி ஆற்றின் கடுகஸ்தொடை கஹல்ல பகுதியிலும் மணல் அகழ்வாராய்ச்சி இடங்களில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினா் அண்மையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் கிளிநொச்சி சிறப்பு பணிக்குழு இணைந்து முல்லைதீவு உதயார்கட்டு பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, 60 மிமீ மற்றும் 81 மிமீ கொண்ட 2 மோட்டார் குண்டுகள், 120 மிமீ கொண்ட 02 மோட்டார் குண்டுகள், 60 மிமீ கொண்ட 12 இல்லுமினேஷன் பாரா (Illumination Para) மோட்டார்கள் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு மோட்டார் குண்டு ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டள்ளது.
இவ்வாறு, மீட்கப்பட்ட வெடிபொருட்கள் கிளிநொச்சி காவல்துறை சிறப்பு பணிக்குழு வெடிகுண்டு அகற்றும் பிரிவினால் பாதுகாப்பாக செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மேற்கு கடற்படை கட்டளை நடத்திய மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது, மகாவலி ஆற்றின் கடுகஸ்தோட்டை, கஹல்ல பகுதியில் மணல் அகழ்வாராய்ச்சி இடத்தில் 08 பாதுகாப்பு உருகிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு உருகிகள் மேலதிக விசாரணைகளுக்காக கடுகஸ்தொடை காவல்துறையினாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. #வெடிபொருட்கள் #முல்லைத்தீவு #உதயார்கட்டு #மகாவலி #கடற்படை