இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கொரோனா வைரஸ் பெருமளவு பாதித்துள்ள நிலையில் அதிலிருந்து மீள்வதற்கு ஒருங்கிணைந்த கொள்கை மிகவும் அவசியமாகிறது என சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) சுட்டிக் காட்டியுள்ளது.
இதனைத் தொிவித்துள்ள ஐஎம்எப் செய்தித் தொடர்பாளர் ஹரி ரைஸ் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார தேக்க நிலையை எதிர்கொள்ள நிதிச்சலுகைகளை அறிவிக்க வேண்டும் எனவும் அதற்காக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐஎம்எப் ஆதரவு வழங்கும் எனவும் தொிவித்துள்ளாா்.
குறிப்பாக குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் எனவும் கடன்கள் மீதான தளர்வை ஏற்படுத்துவது, பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது, நிதி சார்ந்த கட்டுப்பாடு அமைப்புகள் கடன் பெற்ற பொதுமக்கள் மீது நெருக்குதலை ஏற்படுத்தாத சூழலை உருவாக்குவது மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும் உடல் நலன், உணவு உள்ளிட்டவற்றுக்கு வருவாய் சார்ந்த உதவிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இவைதான் பெருமளவு குடும்பங்களை பாதித்துள்ளது எனவும், தொழில் துறையினருக்குத் தேவையான உதவிகளை செய்யலாம் எனவும் ரைஸ் குறிப்பிட்டுள்ளா்ர்.
2020-ம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மைனஸ் 23.9 என்ற நிலைக்கு சரிந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் பாதிப்பால் உலக பொருளாதார நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2020-21-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 4.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது.
சந்தை மதிப்பை உருவாக்குவது, கடனுக்கான வட்டி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என ரைஸ் குறிப்பிட்டுள்ளாா்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 46 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 77,472 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது #இந்தியா #பொருளாதாரவளர்ச்சி #கொரோனா #சர்வதேசநாணயநிதியம் #நிதிச்சலுகை