Home இலங்கைஇலங்கையில் 13வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது

இலங்கையில் 13வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது

by admin

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தவா்களின் எண்ணிக்கை 13 ஆவது உயா்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது.

பஹ்ரேனிலிருந்து இந்த மாதம் 2ஆம் திகதி இலங்கைக்கு சென்றிருந்த நபா் ஒருவா் தனிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 9ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்

இந்தநிலையில் அவா் இன்று  (14) உயிரிழந்துள்ளதாகவும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 60 வயதுடையவா் எனவும் முன்னா் கடற்படையில் சேவையாற்றியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #இலங்கை #கொரோனா #கடற்படை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More