சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதற்கு யாருடன் வேண்டுமானாலும் இணைந்து ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் , ஐஎஸ் அமைப்பை அழிப்பதற்கு அமெரிக்கா எந்த நாட்டுடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறது எனவும் அந்த நாடு ரஷ்யாவாக இருந்தாலும் சரி, வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி அமெரிக்கா தனது ஒத்துழைப்பை அளிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதற்காக நடத்தப்பட்டுவரும் வான்வழி தாக்குதலில், அமெரிக்காவும் இணையவுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட செய்தியினை அமெரிக்க ராணுவத் தளமான பென்டகன் மறுத்திருந்த நிலையில் தற்போது ட்ரம்ப் நிர்வாகம்இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.