லிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் டத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயாந்து செல்கின்றனா்.
இவ்வாறு மிகச் சிறிய படகுகளில் அளவுக்கு அதிகமான மக்கள் சட்டவிரோதமாக நீண்ட கடல் பயணங்கள் மேற்கொள்ளும் ாபாது பல விபத்துக்களும் நிகழ்ந்து பல உயிாிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் லிபியாவின் ஜ்வாரா கடல்பகுதியில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற 3 சிறிய படகுகளில் ஒன்று எதிர்பாராத வகையில் திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் கப்பலில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
தகவலறிந்த லிபிய கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்ட போதும் 24 போின் உயிழந்த உடல்களைத்தான் மீட்க முடிந்தது. மேலும் இந்த விபத்தில் மேலும் பலர் காணாமல் போயிருக்கலாம் எனத் தொிவிக்கப்படுமுகின்ற நிலையில் அவர்களை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. #லிபியா #அகதிகள் #படகுவிபத்து #உயிாிழப்பு