302
குளோபல் தமிழ்ச் செய்திகள்
தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான சர்வதேச ஓருநாள் போட்டித் தொடரின் இலங்கை அணித் தலைமைப் பொறுப்பு உபுல் தரங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அணித் தலைவராக செயற்பட்டு வந்த அன்ஜலோ மெத்யூஸ் அண்மையில் உபாதை காரணமாக நாடு திரும்பியிருந்ததனைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடரின் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆபிரிக்காவில் ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை போர்ட் எலிசபத்தில் முதல் போட்டி ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love