பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்காக பிரபல கூடைப்பந்து வீராங்கனை எலினா லட்சங்கா (Elena Levchenko) க்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள
ஐரோப்பிய நாடான பெலாரசில் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவிவகித்து வரும் அலெக்சாண்டர் லூகாஷென்கோவே 6-வது முறையாகவும் பதவியேற்றுள்ளாா்.
இதனால், 26 ஆண்டுகளாக ஜனாதிபதியாக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக பிரதான எதிர்கட்சிகள் சார்பில் ஆரம்பமான போராட்டம் நாளடைவில் பொதுமக்களின் போராட்டமாக மாறியது.
லட்சக்கணக்கானோர் பங்கேற்றுவரும் இந்த போராட்டத்தை கண்ணீர் புகைகுண்டு, தடியடி நடத்தி காவல்துறையினா் தடுத்து நிறுத்தி வருவதுடன் , போராட்டத்தில் பங்கேற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் நடைபெறுகின்றது.
மேலும், பெலாரஸ் நாட்டில் சினிமா, விளையாட்டு உள்பட பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் அலெக்சாண்டர் பதவியில் இருந்து விலகவேண்டும் என வலியுறுத்தி முறைப்பாட்டு மனுக்களை அனுப்பினர்.
இதில் பெலாரசின் பிரபல கூடைப்பந்து வீரங்கனையான எலினா லட்சங்காவும் ஒருவர். மேலும், இவர் ஒலிம்பிக் போட்டிகளில் பெலாரஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி பிரபலமானவர். இவர் ஜனாதிபதிக்கு எதிரான பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றார்.
இந்நிலையில், சிகிச்சைக்காக நேற்று வெளிநாடு செல்ல முயன்றபோது எலினா லட்சங்காவை கைது செய்த பெலாரஸ் காவல்துறையினா் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினா்.
இதன்போது போராட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்காக 15 நாட்கள் அவருக்கு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #பெலாரஸ் #கூடைப்பந்து #வீராங்கனை #சிறைத்தண்டனை #அலெக்சாண்டர் #ElenaLevchenko