அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தத் தகவலை அதிபர் ட்ரம்ப் தனது டருவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
உலகளவில் கொரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக உள்ள அமெரிக்காவில் இதுவரை 74 லட்சத்து 94 ஆயிர்தது 671 பேர் கொரோனாவில் பாதி்க்கப்பட்டுள்ளதுடன் 2 லட்சத்து 12 ஆயிரத்து660 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்
இந்தநிலையில் ட்ரம்பின் ஆலோசகர் ஹிக்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதயடுத்து, டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக தனது ருவிட்டா் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப் “ சிறிய இடைவெளிகூட இல்லாமல் தொடர்ந்து பணியாற்றிய எனது ஆலோசகர் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நானும், எனது மனைவியும் கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். இப்போது இருந்து இருவரும் தனிமைப்படுத்திக்கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தனக்கும், தனது மனைவிக்கும் கொ ரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அவா் தனது ருவிட்டா் பத்தில் பதிவிட்டுள்ளாா்.
அமெரிக்க அஜனாதிபதித் தேர்தலுக்காக ர் ட்ரம்ப் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவர் கொரோனாவினாலல் பாதிக்கப்பட்டு இருப்பது அவரின் வெற்றியை கடுமையாக பாதிக்கும் என கருதப்படுகின்றது.
அமெரிக்க அரசைப் பொறுத்தவரை ஜனாதிபதியாக இருப்பவர் தனிமைப்படுத்துதல், நோய்வாய்படுதல் போன்றவற்றில் இருக்கும் போது, ஜனாதிபதிப் பணியை, அதிகாரத்தை துணை ஜனாதிபதி ஏற்பார். ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த அறிவிப்பும் அமெரிக்க அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #ட்ரம்ப் #மெலனியா #கொரோனா #அமெரிக்கா