Home இலங்கை902 கிலோ மஞ்சள் கட்டி மூடைகளுடன் இருவர் கைது

902 கிலோ மஞ்சள் கட்டி மூடைகளுடன் இருவர் கைது

by admin

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட   902 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ,இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்று முந்தினம் தாழ்வுபாட்டு கடற்கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான படகினை   சோதனையிட்ட கடற்படையினரால்   19 மூடைகளில் பொதி செய்யப்பட்ட    சுமார் 902 கிலோ கிராம் மஞ்சள்  கண்டு பிடிக்கப்பட்டதுடன்   படகில் இருந்த 02 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 48 வயதுடைய மன்னார் புதுக்குடியிறருப்பு பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மஞ்சள் பொதி யாழ்ப்பாண சுங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள் தனிமைப்படுத்தலுக்காக மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


மன்னார் மாவட்டத்தில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் மஞ்சள் தூள் பதுக்கி வைக்கப்பட்டு 3500 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது #தாழ்வுபாடு #கடற்கரை #மஞ்சள்கட்டி #கடற்படையினர் #கைது #சட்டவிரோத

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More